Connect with us

Sports

பங்களாதேசை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Published

on

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்தனர்.

இதையடுத்து, 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளது.

நாளை இலங்கை-பங்காளதேஸ் அணிகள் மோதவுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணி இந்த பிரிவில் இருந்து 2 வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும்.