Connect with us

Sports

Grandhomme ஓய்வு

Published

on

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கொலின் டி கிராண்ட்ஹோம் (Colin de Grandhomme) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

காயம் மற்றும் மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதும்தான் இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

36 வயதான அவர் கடந்த 2012 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார்.

29 டெஸ்ட், 45 ஒருநாள் மற்றும் 41 டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2679 ரன்கள் எடுத்துள்ளார்.

அவரது ஓய்வு முடிவை அடுத்து நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் இருந்து அவர் விடுவித்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *