Connect with us

உள்நாட்டு செய்தி

உலகம் முழுவதும் கொரோனா…

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியே 62 லட்சத்து 41 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 58 கோடியே 18 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 89 ஆயிரத்து 396 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் நேற்று (29) மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 669,819 ஆக அதிகரித்துள்ளது.