உள்நாட்டு செய்தி
சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம்…

ஹட்டன் சமர்ஹில் தோட்டத்திலுள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஒகஸ்ட் 7ஆம் திகதி உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் இறுதி அறிக்கையில் கம்பியால் செய்யப்பட்ட வலையில் சிக்கி உயரமான இடத்தில் மணிக்கணக்கில் தொங்கியதன் காரணமாக உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிறுத்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுத்தை மரத்தில் கீழ் சிக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக, சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.