உள்நாட்டு செய்தி
டிக்கோயா சமர்வீல் தோட்டப் பகுதியில் உயிர்ழந்த சிறுத்தை புலி தொடர்பில் மூன்று பேரிடம் வாக்குமூலம்

ஹட்டன் டிக்கோயா சமர்வீல் தோட்டப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்ழந்த சிறுத்தை புலி தொடர்பில் நேற்று (09) மூன்று பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவிளங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவீன் பணிப்புரை க்கு அமைய இன்றைய தினம் ஹட்டன் டிக்கோயா வனராஜா சமர்வீல் தோட்டபகுதிக்கு சந்ரா ஹேரத் தலைமையில் சென்ற குழுவினரினால் உயிர்ழந்த சிறுத்தை புலி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
நல்லதன்னி வனவிலங்கு அதிகாரி மற்றும் சிறுத்தை புலி பொறியியல் சிக்குண்ட மரத்தில் இருந்ததை இனங்கொண்டு 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கிய இளைஞன் மற்றும் சிறுத்தை புலி ஏறியிருந்த மரத்தினை வெட்டியவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அதிகாரிகளின் அலட்ச்சியத்தால் குறித்த சிறுத்தை புலி உயிர்ழந்தது என உறுதி செய்யப்பட்டால் வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.