உலகம்
இன்று உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம்

ரஷ்ய அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனின் 31ஆவது சுதந்திர தினம் இன்று(24) கொண்டாடப்பாடுகின்றது.
1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உக்ரைன், சோவியத் ஆளுகையிலிருந்து விடுபட்டு இறையாண்மை மிக்க நாடாக மாறியது.
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்து இன்றுடன்(24), 06 மாதங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் உக்ரைன் வரலாற்றில் இது ஒரு முக்கிய நாளாக பதிவாகியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யாவால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாமென எதிர்வுகூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் தலைநகலில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.