Connect with us

உலகம்

“ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்”

Published

on

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது.

நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷியாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.

ஆனால் ரஷியாவின் அழைப்பை உக்ரைன் முதலில் ஏற்கவில்லை.

பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் விரும்பவில்லை.

மீண்டும் ரஷியா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.

அதன்படி, ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது.

அந்த குழுவினர், ரஷிய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

இதன்படி இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும்  என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.