உள்நாட்டு செய்தி
பொதுநலவாய செயலாளர் நாயகம் ஆலோசனை
பொது நலவாய அமைப்பு சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க, ஜனநாயக முறையில் ஆட்சி செய்தல், சட்டத்துறையின் சட்ட திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு, இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் Rt Hon Patricia Scotland QC ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் பொதுநலவாய அமைப்பில் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் அரசியலமைப்பு பற்றியும் நிர்வாகத்தை பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை எளிதாக்குவதிலும், இலங்கைக்கு தேவையான முழு ஆதரவினை வழங்குவதற்காக பொதுநலவாய செயலகம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என செயலாளர் நாயகம் வலியுறுத்தி கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து செயலாளர் நாயகம் இலங்கையிலுள்ள அனைவரையும் அமைதியுடனும் செயற்படுமாறு கேட்டு கொண்டுள்ளார்.