Connect with us

உள்நாட்டு செய்தி

உணவு பிரச்சினையை தீர்ப்பதற்கு 14 மில்லியன் டொலர் உதவி

Published

on

ஜி-7 நாடுகளின் ஒன்றியம் மற்றும் உலக வங்கி, இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் உதவி வழங்கியிருப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உணவு பிரச்சினையை தீர்ப்பதற்கே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இணையவழி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பதில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் உர இறக்குமதி தடையின் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் அரிசி தேவை 20 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும் . ஆனால் தற்போது 16 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.