Connect with us

உள்நாட்டு செய்தி

ஜூன் மாதத்தில் மாத்திரம் 8,179 டெங்கு நோயாளர்கள்

Published

on

ஜூன் மாதத்தில் மாத்திரம் 8,179 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இதுவாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தில் 32,385 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.