Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 8 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

Published

on

அமைச்சரவை அந்தஸ்துள்ள 08 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

போக்குவரத்து , பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், நீர்வழங்கள் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர பதவி​யேற்றுள்ளார்.

கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரணவும், புத்தசாசன,மத விவகாரங்கள் மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கான அமைச்சராக விதுர விக்ரமநாயக்கவும் பதவிப் பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது,

சுற்றாடல் அமைச்சராக நஷீர் அஹமட் பதவியேற்றுள்ளதுடன், நீர்பாசன , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.