Sports
RCB பிளே ஓப் சுற்றுக்குள் 4-வது அணியாக நுழைந்தது

IPL- பிளே ஓப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மட்டுமே இருந்தன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 புள்ளிகளுடனும் இருந்தன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளால் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறியது.
எனவே, புள்ளிகள் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) பிளே ஓப் சுற்றுக்குள் 4-வது அணியாக நுழைந்தது.