Connect with us

உள்நாட்டு செய்தி

மீதமிருப்பது அணிந்திருக்கும் ஆடை மாத்திரமே: நிமல் லங்சா

Published

on

முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தனது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து இன்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிபூர்மான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

தன்னிடம் தற்போது மீதமிருப்பது அணிந்திருக்கும் ஆடை மாத்திரமே எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்களில் அதிகளவான சேதங்கள் எனக்கே ஏற்பட்டன. சம்பவங்களுக்காக நான் இழப்பீடு கோரவில்லை. நியாயமான விசாரணைகளை கோருகிறேன்.

இந்த சம்பவங்களுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ தொடர்பில்லை. இவற்றுடன் சம்பந்தப்பட்ட குழுவினர் பற்றி தகவல்களை எதிர்காலத்தில் வெளியிடுவேன்.

தந்தை, பாட்டானரிடம் இருந்து கிடைத்தவை மட்டுமல்லாது நான் சம்பாதித்த சொத்துக்களும் இவர்களின் வன்முறைகளால் இல்லாமல் போனது. எனினும் அது சம்பந்தமான மனதை தோற்றிக்கொண்டுள்ளேன்.

இப்படியான செயல்கள் தொடர்ந்தும் நடந்தால், நாடு இல்லாமல் போய்விடும். எனக்கு உதவி செய்ய பல நண்பர்கள் முன்வந்துள்ளனர்.

பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் என்னை தனது ஹோட்டலில் வந்து தங்கிக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பெரிய பொருளாதார நெருக்கடி நிலவும் சூழ்நிலையில், எமக்குள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டால் நாடு இல்லாமல் போய்விடும் எனவும் நிமல் லங்சா மேலும் தெரிவித்துள்ளார்.