உள்நாட்டு செய்தி
பிரதமரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது புதிய பிரதமரின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் 26வது பிரதமராக, ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பதவியேற்றார்.
இதன் மூலம் இலங்கையின் பிரதமராக நேற்று (12)ஆறாவது முறையாக பதவி ஏற்றுள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற ஜனாதிபதியின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனானஅரசாங்கம் இருந்த வேளையில் தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பிரதமரானார் என்பதும் குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.