உள்நாட்டு செய்தி
அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் எதிர்பார்ப்பு

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு, அது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.
அத்திருத்தப்பட்ட அரசியலமைப்பினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பாகும்.