உள்நாட்டு செய்தி
விமல் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான களத்தை அமைக்குமாறு விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
11 அரசாங்க பங்காளிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய கூட்டத்தில் இன்று (04) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கேவலமான ஆட்சியை அகற்றி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இந்த நாட்டில் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்துமாறு, ஜனாதிபதியிடம் இன்று மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.