உள்நாட்டு செய்தி
தேசிய அரசில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது

” தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சி எடுத்துவந்தாலும், அவ்வாறானதொரு அரசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவை வழங்காது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலவாக்கலையில் நேற்று (27) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.