உள்நாட்டு செய்தி
நுவரெலியா தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில்

டீசல் உள்ளிட்ட எரிப்பொருளை உரிய முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (25) நவரெலியா பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
நுவரெலியா சாந்திபுர, மிபிலியான, ஹாவா எலிய, பொரலாந்த, ராகல, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய இடங்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.