உள்நாட்டு செய்தி
ஜனாதிபதியுடன் TNA கலந்துரையாடல் நிறைவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
காலை 10.30 க்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 வரை நீடித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா, பாராமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.சித்தாத்தன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், த. கலையரசன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.