உள்நாட்டு செய்தி
“இலங்கையுடன் இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாகச் செயற்படுகின்றது”
மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று நாடு திருப்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியா – இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்றும் கூறினார்.
குறிப்பிட்ட கடனை வழங்கிய இந்தியா அதற்காக விதித்த நிபந்தனைகள் என்ன ? என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,
இந்த கடனை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஜனாதிபதி நீண்டகால திட்டமிடலின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையுடன் இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாகச் செயற்படுகின்றது. இலங்கைக்குத் தேவையான பொருளாதார சமூக ஒத்துழைப்புக்களை நேரடியாக வழங்குவதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.