Connect with us

உள்நாட்டு செய்தி

இன்றும் மின்வெட்டு

Published

on

நாடளாவிய ரீதியில் இன்றும்(16) மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கமைய மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 02 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம் P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 03 மணித்தியாலங்களும் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.