உள்நாட்டு செய்தி
அற்புதம்மாளின் அடுத்த கனவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இதுகுறித்து அவருடைய தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி.
ஏற்கனவே மகன் திருமண ஏற்பாடு செய்யப்பட இருந்த நிலையில் இந்த வழக்கு எந்த நிலையில் செல்லும் என்று யோசித்தோம்.
தற்போது அதற்கு எந்த தடையும் இல்லை. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.