உள்நாட்டு செய்தி
பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவு:சீனா

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக ஒருவரையொருவர் ஆதரித்து வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லீஜியாங்மே இதனைத் தெரிவித்தார்.