Connect with us

உலகம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியது

Published

on

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9 ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணு மின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின.

அணு மின் நிலையம் மீது குண்டுகள் வீழ்ந்ததாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துளளார்.

அந்த அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலைக்கருகில் தீ பரவியதையடுத்து, ஆசியாவில் பங்குகளின் விலைகள் சரிவடைந்துள்ளன.