உள்நாட்டு செய்தி
அமைச்சர்களின் மாற்றம்: இதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா?

இன்று இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைக்கு காரணம் ஜனாதிபதியோ, பிரதமரோ, அரசாங்கமோ அல்ல. 69 இலட்சம் வாக்களித்த மக்களே. அந்த வாக்குகளை பயன்படுத்தியே 20வது திருத்த சட்டம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இவை அனைத்தையும் அரசாங்கம் சாதித்து கொண்டது.
வாக்களித்த மக்கள் மாத்திரம் அல்ல. வாக்களிக்காத ஒரு கோடியே ஐம்பதாயிரம் மக்களும் இன்று துர்ப்பார்க்கியமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அட்டனில் 04.03.2022 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.