Connect with us

உள்நாட்டு செய்தி

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த காட்டுப்பகுதியில் தீ

Published

on

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த காட்டுப்பகுதிக்கு இனம்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டதன் காரணமாக நீர்வீழ்ச்சியை அண்மித்த சுற்றியுள்ள பகுதியில் சுமார் 30 ஏக்கர் வரை தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.

மலையக பகுதியில் வரட்சியான காலநிலையுடன் கடும் காற்றும் நிலவி வருகிறது. பற்றைக்காடுகள் கருகி போயுள்ளதனால் தீ மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது கடினமாகவுள்ளன.

வரட்சியான காலநிலையினை அடுத்து மலையக நீர்ப்போசன பிரதேசங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப் பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களுக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்கள் அற்றுப்போவதுடன் சிறிய வகை உயிரினங்கள், எமது பிரதேசத்திற்கே உரித்தான அரிய வகை தாவரங்கள் பெறுமதிமிக்க மரக்கன்றுகள் ஆகியன அழிவடையும் நிலையினை எதிர்நோக்கியுள்ளன.

வரட்சியான காலநிலையினை அடுத்து பல பிரதேசங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் இந்நிலை மேலும் அதிகரித்து நீரின்றி பல்வேறு பிரச்சினைக்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.