உள்நாட்டு செய்தி
தடையின்றி மின் சாரத்தை வழங்கவே எதிர்பார்ப்பு: காமினி லொகுகே

நாளை (01) லங்கா IOC நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்திற்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின் அளவு குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து குறுகிய காலத்திற்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தடை இல்லாமல் மின் சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அதற்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.