உள்நாட்டு செய்தி
ஐவரில் ஒருவர் தேடப்படுகின்றார்

பதுளை – அட்டாம் பிட்டிய கரந்திஎல்ல தற்றில் நீராடிய சந்தர்ப்பத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றுமொரு நபரின் சடலம் தொடர்ந்தும் தேடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன ஐவரில், நான்கு பேரின் சடலங்கள் நேற்று (29) மாலை கண்டெடுக்கப்பட்டன.
எனினும் காணாமல் போன இளைஞர் ஒருவரே தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எட்டாம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ராஜா டெவிட் குமார் (23), சிவ சுப்ரமணியம் காஞ்சனா (21), பவாணி (22), சிந்து (18) மற்றும் சிரியா (20) ஆகியோரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த ஆற்றில் மிகவும் ஆழமாக பகுதி உள்ளதால் யாரும் அதில் குளிப்பதில்லை என அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.