உள்நாட்டு செய்தி
காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிக்க வேண்டும்

உள்ளாட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பானது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்டுள்ள சாவுமணியாகும். எனவே, தேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.