உள்நாட்டு செய்தி
வீடற்ற பிரச்சனையை தீர்ப்போம்: சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நிச்சம் உருவாக்குவோம் எனவும் அதில் இந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்ட வீடுகள் மாத்திரமல்லாது அனைத்து மக்களினதும் வீடற்ற பிரச்சனையை தீர்ப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாட்டினுடைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச புதுக்குடியிருப்பில் மக்கள் மத்தியில் சூளுரைத்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாச இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளார்.