Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் இன்று ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க திட்டம்

Published

on

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் குழுவினர் அடங்கிய விசேட விமானம் ஒன்று நேற்று (08) இரவு இலங்கை வந்தடைந்தது.

இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினரை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று துறைமுக நகரத்தில் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் நாட்டின் உயர் அதிகாரிகள் சிலரையும் அவர் சந்திக்க உள்ளார்.

இதேவேளை, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவு தினம் இங்கு நினைவுகூரப்படவுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது பல முதலீட்டு யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.