Connect with us

உலகம்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு

Published

on

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிறுக் கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த் வருகிறது.
நேற்றைய தினம் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அதே நேரம் ஓமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தமிழகத்தில் கடந்த ஆம் திகதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரெயில் ஆகியவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவத்துறையும், காவல்துறையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.