Connect with us

உள்நாட்டு செய்தி

தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி 15 கிலோ கோதுமை மா

Published

on

பெருந்தோட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் விசேட விலைக்கழிவு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி மாதாந்தம் கிலோ ஒன்று 80 ரூபா என்ற விலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

மேலும், அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 666,480 ஓய்வூதியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக மாதாந்தம் 5,000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.75 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 20 பேர்சஸ் காணியில் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்குஞ 5,000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு ஏக்கருக்கும் குறைவான 20 பேர்ச்களுக்கு மேல் உள்ள வீட்டுத்தோட்டங்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதே தொகையை இரு தரப்பினருக்கும் திரும்ப வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கான விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.