உள்நாட்டு செய்தி
பல புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள்
இலங்கை தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இவ்வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் புதிய தொழில் வாய்ப்புகளும் இதில் உள்ளடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்லும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.