Connect with us

Sports

மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு

Published

on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டகாரர் மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஹபீஸ் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

218 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 ஆயிரத்து 614 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 134 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

115 T20 போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 440 ஓட்டங்களையும் 61 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அத்துடன் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மூவாயிரத்து 652 ஓட்டங்களையும், 53 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடதக்கது.