இந்த மாதத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துடன்...
கடந்த சில தினங்களாக பெய்த மழையைத் தொடர்ந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் D. அபேசிரிவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில்...
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷபாஸ் செரிப் விரைவில் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தெரிவுச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்றதால் இம்ரான் கானின் அரசு...
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டுள்ளார். 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம்...
சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை சன்ரைச்ர்ஸ் அணி பதிவுசெய்தது. சென்னை அணி தொடர்ந்து நான்காவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வூட் (Chris Silverwood) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரும், வீரருமாவார். பங்களாதேஷூடனான டெஸ்ட் தொடரிலிருந்து...
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 10 லட்சம் யாத்ரீகர்களுக்கு அனுமதி அளிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. 65 வயதுக்குட்பட்ட, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும் என...
அரசை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தேசிய கொடிகளுடன் கலந்துக் கொண்டுள்ளனர்.
தலவாக்கலை மடக்கும்புர புதுகாடு பிரிவில் 84 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கருப்பன் மூக்காயி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மூதாட்டி காதில் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். நீதவான்...
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை...