முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுப்பாட்டிற்குள்...
வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. மனித உாிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம் தொிவித்துள்ளாா். மேலும் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றுகையில். நாட்டை நேசிக்கும் இலங்கைப்...
பல்வேறு அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று(11) மூன்றாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. ‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது. சுகாதாரம், துறைமுகம்,...
இன்றைய தினம்(11) நடைபெறவிருந்த பாராளுமன்ற கட்சிகளின் விசேட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தை...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில்...
அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தி அமைதியாக இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு ஆணைக்குள் ஒருமித்த கருத்து மூலம்...
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதற்கு மதிப்பளித்து, அமைதியான முறையில் செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு முப்படையினருக்குக் காணப்படுகிறது....
கொழும்பு-02 பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு விரைந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது, பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கிருந்த மக்களை கலைப்பதற்காக, வானத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப்...
இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.