உள்நாட்டு செய்தி
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தேவையில்லாமல் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.