பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். இன்று (07) நள்ளிரவு முதல் இந்த வரி அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். குறித்த மயானத்தை அமைக்க 24 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது....
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள்...
நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தடுப்பூசி வழங்கும் செயத்திட்டத்திற்கமைய...
வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார். வெலிக்கடை...
மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் இல்லை என எதிர்கட்சியினர் நேற்று பாராளுமன்றத்தில் செய்த உரைகள் பொதுமக்களை தவறுதலாக வழிநடாத்துவதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையின் ஐந்தாவது பிரிவின் அடிப்படையில்,...
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப்...
நேற்று (05) நாட்டில் மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளது.
விறகு வெட்டுவதற்காக தாயுடன் வனப்பகுதிக்கு சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை தேடி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். தனது...
அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பதுக்கி...