உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 33 இலட்சத்து 58 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 88 இலட்சத்து 83 ஆயிரத்து 264 பேர் சிகிச்சை...
எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். செப்டம்பர் 06ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் நோக்கத்தை வெளிநாட்டு அமைச்சர் தெளிவாக விவரித்தார். ஐரோப்பாவின் பழமையான கற்றல் தளமான பொலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சர்வதேசக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் இலங்கைப் பிரதமர் சிறப்புரை ஆற்றவுள்ளார். எந்த நிலையிலும், திருத்தந்தை பாப்பாண்டவரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் செய்வதற்கு பிரதமர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்க வில்லை அல்லது பிரதமருக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. பொலோக்னாவில் நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் இத்தாலியை விட்டு வெளியேறுவார்கள்.
கொவிட் 19 வைரசு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை முன்னணியில் இருப்பதாக மூத்த சரவ்தேச ஆய்வாளர் விஜித்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பொதுமக்களின்...
கேகாலை – தெரணியாகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்ததொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.11 வயதான டில்மினி என்ற...
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கப்ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி...
பல வருடங்களாக தீர்வு காணப்படாத அதிபர் ஆசிரியரகளின் சம்பள பிரச்சினைக்கு தீர்வாக ,மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவார்கள் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இலங்கையணி வெற்றி கொண்டுள்ளது. இன்று இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கையணி 78 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமையவே ஒரு...
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கையிருப்பில் உள்ள சீனியை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஒரு கிலோ சிவப்புநிற சீனி 117 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை நிற சீனி 120...
நாட்டில் நேற்றைய தினம் (06) 184 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (07) தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொவிட்...