இன்றைய பொருளாதார நெருக்கடியில் அரசியல் இலாபம் தேட கூடாது ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஸ தெரிவித்தள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறம் சர்வக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக இது நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினமும் (23) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W...
சர்வ கட்சிகள் மாநாடு இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து எவ்வாறு...
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என அறியமுடிகின்றது.
பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வக் கட்சி மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.