Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வ கட்சி மாநாடு

Published

on

சர்வ கட்சிகள் மாநாடு இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் அரசாங்கத்திடம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

அவ்வாறான அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிவதற்காக ஜனாதிபதி இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டியுள்ளார்.