இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை.. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில்...
உள்ளக மற்றும் வௌியரங்குகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் முகக்கவசம்...
கட்டார் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து...
இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் தூத்துக்குடியில் இருந்து உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பெஷில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து நிலக்கரி அனல்மின் நிலையங்களும் முழுத் திறனில் மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில நீர்மின் நிலையங்கள் இயங்கவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர்...
சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்ற விவாதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போயை பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவ தயார் என முகாமைத்துவ பணிப்பர்ளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (07) மாலை இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்....
கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. S&P குளோபல் மார்க்கெட்டிங் இன்டெலிஜென்ஸ்...