உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நாடு முழுவதும் 2 மணித்தியாளங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக கடன் மறுசீரமைப்புக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மானியம்...
இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான மதுபானம், வயின், பீர் போன்றவற்றுக்கான வற் வரி 20% மற்றும் சிகரெட் மீதான வரி 20% அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 420 ரூபாவாக...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று செவ்வாய்க்கிழமை (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் (02) உத்தரவிட்டுள்ளது.டிசம்பர் 21ம்...
சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.பணியகம்...
இன்று நள்ளிரவு முதல் சிலோன் வயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினாலும், இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது.