வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது....
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா நேற்று (16) இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து உரையாடியனார். ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, நாடு திரும்பும் வழியிலேயே...
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கெல்சி தோட்டத்தைச் சேர்ந்த டொமினிக் அனுஷன் (வயது 21) ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு சவப்பெட்டியை ஏற்றிச் சென்று ஒப்படைத்த பின்னர், சாரதி தனது வீட்டுக்கு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (16) இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இன்று (17.11.2022) அதிகாலையிலேயே அவ்வழியாக சென்ற தொழிலாளர்கள் விபத்தை கண்டு நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து, பொ
கட்டாரில் நடைபெறும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் பரிசு தொகை விபரம் வெளியாகி உள்ளது. மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும். 2018-ம் ஆண்டு...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தனுஷ்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று (17) சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி தனுஷ்கவை 150,000 டொலர்...
அடுத்த வருடம் யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுமென வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டிலுள்ள யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு இறுதியாக 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்நிலையில், புதிய கணக்கெடுப்பை அடுத்த...
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி,...
சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இன்று (16)...
அரச மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் தலையிட்டு, ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென உலகின் பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளின் ஒன்றியமான G20 அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தோனேசியாவில்...
மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்டகுழுவினர் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம்...