உள்நாட்டு செய்தி
அடுத்த வருடம் யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு

அடுத்த வருடம் யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுமென வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாட்டிலுள்ள யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு இறுதியாக 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இந்நிலையில், புதிய கணக்கெடுப்பை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.