உள்நாட்டு செய்தி
தப்பிச் சென்ற சிறைக்கைதி கைது
ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற சிறைக்கைதி ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மஹர சிறைச்சாலையில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் கடந்த தினம் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக காயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.