உள்நாட்டு செய்தி
மனோவின் பிறந்தநாள் விருப்பத்தை அறிய ஆவலா?

தமிழ் அரசியல் பரப்பை எண்ணி தனக்கு சலிப்பு தன்மை ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற கட்சி ஒன்றுகூடலில் கலந்துக்கொண்டு உரையாற்றி போதே அவர் இதனை கூறினார்.
“இதற்கு முன் நான் கடந்து வந்த பிறந்த நாட்களில் தோன்றாத ஒரு விருப்பம் எனக்குள் தோன்றுகிறது. அடுத்த பிறவியில் நான் ஒரு இலங்கையிலே ஒரு சிங்களவராக பிறக்க வேண்டும். தென் மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள குக்கிராமத்து குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான காரணங்களை நான் பகிரங்கமாக கூற விருபவில்லை” என்றும் கூறினார்.