உள்நாட்டு செய்தி
யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடப்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ் மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
அவர் மெலும் தெரிவிக்கையில்,
“எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல.ஆனால் எங்களை பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும். “