Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ் நகர எல்லைக்குள் புதிய வகை மலேரியா நுளம்பு

Published

on

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது மிகவும் அனர்த்த நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சிலருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசேட சைவத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண நகர எல்லையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்ப துரிதமாக பரவும் துரிதமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.